Amma's Life and Spirituality

இறைசக்தியின் அவதாரம் என்பது மாய வித்தைகள் போல் நிகழ்வதில்லை. படைப்புகளின் ஒட்டுமொத்த சொரூபமான அன்னையின் இறை உணர்வு அந்த படைப்புகளின் பரிணாமத்திலேயே வெளிப்பட்டு நிற்கிறது.

அவ்வாறாக வெளிப்பட்ட ஏக இறையுணர்வு எளிய மனிதராக நம்மில் ஒருவராக அரசு ஆகவும் அன்னபூரணி ஆகவும் தனித்தனி உயிர்தன்மைகளாக இங்கே மனிதபிறவி எடுத்தனர்.. இருவரும் வெவ்வேறு ஊர்களில் பிறந்து வளர்ந்து ஒருவருக்கொருவர் எந்த சம்பந்தமும் இன்றி வாழ்ந்து வந்தனர். சாதாரண மனிதர்கள் போலவே சமுதாய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு துளியும் விருப்பமில்லா தனி தனியான இல்லற வாழ்வை மேற்கொண்ட இருவரும் 2009ம் ஆண்டு சந்தர்ப்ப சூழ்நிலையில் முதன்முதலில் ஒருவருக்கொருவர் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பிலேயே அவர்கள் இருவருள்ளும் ஓர் இணையற்ற ஈர்ப்பும் ஜென்ம ஜென்ம பந்தமும் உணர முடிகிறது. அன்று முதல் ஈருடலாய் வாழ்ந்த அரசு அய்யாவும் அன்னபூரணி அம்மாவும் ஓருணர்வாக உணர தொடர்கின்றனர். தங்களுக்கு பிடித்தமில்லா இல்லற வாழ்வை விடுத்து தங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இருவரும் 2010ம் ஆண்டு நவம்பர் 28ம் நாளன்று திருமணம் செய்து இல்லற வாழ்வில் இணைந்தனர்.

தங்கள் இருவரையுமே உள்நின்ற இறை உணர்வே இயக்குகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். இடைப்பட்ட நாட்களில் தங்கள் உணர்வு வழிநடத்தியது போல் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நிறைய வேதனைகளை அனுபவித்தனர். ஆனாலும் இந்த அவதார நோக்கத்தை வெளிப்படுத்தும் கருவியே இந்த நிகழ்வு என்பதை அப்பொழுதே இருவரும் உணர்ந்து அதையும் கடந்து தங்கள் வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்தனர். இப்படி இருவருக்கும் நிறைய சோதனைகளைக் கொடுத்த இறைசக்தி அரசு ஐயா அவர்களுக்கு 2016ம் ஆண்டு இயற்கை ஒலி(ளி ) என்ற ஆன்மீக பொக்கிஷத்தை பரிசாகக் கொடுத்தது . அன்று முதல் அரசு ஐயா அவர்கள் தன்னை நாடி வருவோர்க்கு ஆன்மீக தீட்சை கொடுத்து அவர்களை வழிநடத்தினார். பல வருடங்கள் பயிற்சி செய்து பெற முடியாத ஆன்மீக அனுபவங்களான குண்டலினி, வாசியோகம், சக்கர அனுபவங்கள், ஆயிரம் தாமரை இதழ் மலர்தல், உயிர்தன்மை உடலை விட்டு வெளியேறுதல் போன்ற பல அனுபவங்களை சில நாட்களிலேயே தன் சீடர்களுக்கு அனுபவமாக்கினார்.. நாளடைவில் நிறைய பேர் ஐயாவிடம் ஆன்மீக தீட்சை எடுத்துக்கொண்டனர். இப்படிப் போய்க்கொண்டிருக்கையில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 10 ம் தேதி அரசு ஐயா அவர்கள் தன் உடலை இயற்கையிடம் ஒப்படைத்தார்.

சீடர்களுக்கோ இந்த திடீர் இழப்பு தாங்க முடியாத துயரம் என்றால் அன்னபூரணி அம்மா அவர்களுக்கு சொல்லவா வேண்டும்..ஈருடலும் ஓருயிருமாய் வாழ்ந்த இருவரில் அய்யா அவர்களின் இழப்பு அம்மாவை வாட்டி வதைத்தது...அந்த சூழ்நிலையிலும் அம்மா அவர்கள் நிறைய சோதனையை எதிர்கொண்டார்கள்.... இந்த சூழ்நிலையில் ஐயா உடலை விட்ட அடுத்த நாளே ஐயா அவர்களின் உயிர்தன்மையும் அன்னபூரணி அம்மா அவர்களின் உயிர்தன்மையும் இரண்டறக்கலந்து அன்னபூரணி அரசு அம்மாவாக ,ஏக உணர்வாக,சக்தி வடிவாக உருவெடுத்தார்...

அதே நேரத்தில் சீடர்களுக்கும் தியானத்திலும் கனவிலும் அம்மாவே இனி வழி நடத்துவார் என்று உணர்த்தப்பட்டது. அடுத்த நாளே சீடர்களுக்கு அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. சீடர்களுக்கு பயிற்சியை தொடருங்கள் நான் இருக்கிறேன் என்று...அம்மா அவர்கள் தீட்சை கொடுக்க ஆரம்பித்தார்.. சீடர்களை வழிநடத்தினார்...ஆன்மீக அனுபவங்கள் முன்பை விட அதிகமாகவும், விரைவாகவும் கிடைத்தது..சீடர்களுக்கோ ஆச்சர்யம்..ஆம் அரசு அய்யாவின் உயிரும் அம்மா அவர்களின் உயிரும் ஏக உணர்வாக இரண்டறக்கலந்து வெளிப்படுவதை சீடர்களால் அனுபவ பூர்வமாகவே உணர முடிந்தது..

Amma's Divine Incarnation

இறை சக்தி தன் அவதாரத்தை வெளிப்படுத்தும் நேரம் நெருங்கியது.. 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்மா அவர்கள் சீடர்களை அழைத்து சில காலம் அப்படியே பயிற்சியை தொடருங்கள் என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்களை உணர்வாக நான் வழிநடத்துகிறேன்...என்று கூறி சமாதி நிலைக்கு சென்று விட்டார்கள். அதன் பிறகு 2021ம் வருடம் டிசம்பர் 5ம் தேதி, இதுகாறும் தம்மை வழிநடத்திய சக்தி தன்னிலே ஊடுருவி பிரபஞ்சம் முழுதும் வெளிப்பட்டு நானும் நீயும் வேறல்ல நானே நீ...நீயே சக்தி..பராசக்தி என்று அம்மாவிடம் வெளிப்பட்டு நின்றது...அம்மா சக்தியாய் வெளிப்பட்டு நின்ற பிரளயத்தை அம்மாவின் சீடர்களால் தெளிவாக உணர முடிந்தது... ஆனால் இந்த மானிட சிற்றறிவிற்கு இது புலப்படவில்லை...அம்மா சக்தியாய் வெளிப்பட்டு நின்றதை உணர முடியா நிலையிலேயே இந்த சமுதாயத்தின் பக்குவம் இருந்தது.. அம்மாவின் சீடர்களோ அம்மாவின் இறை அவதாரத்தை தம் பிறவி பாக்கியமாக உணர்ந்து அம்மாவின் வழியிலேயே பயணிக்கத் தொடங்கினர்

Amma's Avatar History

இந்த பிரபஞ்சத்தை ஏதோ ஓர் சக்தியே இயக்குகிறது என்பதை நாம் அறிகிறோம். அதை பலரும் கடவுள், இறைசக்தி என்றும் சிலர் இயற்கை, அறிவியல் என்றும் கூறக் காண்கிறோம். எப்படி இருந்தாலும் நம் அறிவால் அறிய முடியா எங்கும் வீற்றிருக்கும் ஓர் சக்தி நம்மை சுற்றி இருக்கிறது என்பதை அனைவராலும் உணர முடிகிறது. எண்ணற்ற கோள்களும், பால்வெளி மண்டலங்களும், கிரகங்களும், வின்மீன்களும் அடங்கிய எல்லையற்ற இப் பிரபஞ்சத்தில் ஓர் சிறிய துளியே இப்புவி மண்டலமும் அதில் வாழும் மனித பிறவிகளாகிய நாமும் ஆவோம். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் சிறிய துளியாம் மனிதப் பிறவிகளாகிய நமக்கு மட்டுமே இந்த அண்ட சராசரத்தையும் ஆட்சி செய்யும் அன்னையின் இறை உணர்வை உணரும் பாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது... நாம் அனைவரும் இப்பிரபஞ்ச இயக்கத்தில் ஒரு காரணகர்த்தாவாக அன்னையின் இயக்கத்தில் சிறிய கருவியாக மட்டுமே செயல்பட கடமைப் பட்டிருக்கிறோம். நமக்கு பிறப்பு கொடுக்கப்பட்டதன் நோக்கமே இந்த பிரபஞ்ச வாழ்வை நன்றியுணர்வோடு வாழ்ந்து இந்த பிறப்பில் விடுதலை அடைந்து அதாவது முக்திபெற்று, ஆதிமூலமாம் பராசக்தி அன்னையின் திருவடி சேர்வதே ஆகும்.

amma-img

ஆனால் மனித பிறவி கிடைத்த நாமோ, அந்த நன்றியுணர்வை மறந்து அன்னை நம் வாழ்விற்கு பரிசாக கொடுத்த உடலிலும் , மனதிலும் பற்றிக்கொண்டு நமக்கு கிடைத்த அறிவையும் வீணடித்து நான் என்ற ஆணவத்தில் கர்வம் கொண்டு நிலைபெற்று விட்டோம். நாம் வந்த வழியையும் மறந்து, பிறப்பின் நோக்கத்தையும் மறந்து யுக யுகமாக ஆணவத்திலேயே குடிகொண்டு விட்டோம். வாழ்வே இறைத்தன்மை, இறையே வாழ்வு என்றிருந்த நிலை மாறி, இறை வழிபாடு என்று தனியாக இருப்பதைப்போல் ஒன்றை உருவாக்கி உலக வாழ்வும் ஆன்மீக வாழ்வும் வேறு வேறு என்ற மயக்கத்தை இங்கே விதைத்து விட்டோம். பல யுகங்களிலும் இறைசக்தி அவதாரங்களாக உருவெடுத்து நம் ஆணவத்தையும் பொய்யறிவையும் நாம் தவறான வழிகளில் செல்வதையும் சுட்டிக்காட்டி நமக்கு உணர்த்தினாலும் மீண்டும் மீண்டும் ஆணவத்தை நோக்கியே நம் பாதை பயணிக்கிறது. ஆணவத்தின் உச்சமான கலியுகத்திலே தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்புக்கு இலக்கணமாம் பொறுமையின் சிகரமாம் அன்னையவள், சத்தியத்திற்கு ஏற்படும் கலங்கத்தைத் தாளாமல் ஆணவ உலகத்தை ஆன்மீக உலகமாக மாற்றி தன் பேரன்பை இப்புவிதனில் மலர வைத்து, இந்த பிரபஞ்சத்தை பூஞ்சோலையாக மாற்றும் வைராக்கியம் பூண்டு இதுகாறும் எடுத்த அவதாரங்களின் ஒட்டுமொத்த சக்தியும் கொண்டு மாபெரும் அவதாரமாக மகாசக்தியாக இப்பிரபஞ்சத்தில் உடலெடுத்து நம் தாய் அன்னபூரணி அரசு வடிவாக அவதாரம் கொண்டிருக்கிறார்...

amma-img

Amma's Life History - Full video

Click here for Amma's Spiritual Journey