அம்மா ஸ்ரீ அன்னபூரணி அரசு அவர்கள் இந்த புவிதனில் மலர்ந்த சத்தியத்தின் அவதார வடிவாக மக்களால் அன்போடு போற்றி வணங்கப்படுகிறார்...
ஒவ்வோர் யுகத்திற்கும் ஒருமுறை அவதரித்து மக்களுக்கு அருள்பாலிக்கும் அந்த ஆதிசக்தி அன்னையவள், இந்த கலியுகம் மீட்க அம்மா ரூபமாய் அவதாரம் பூண்டிருக்கிறார்...
பிறவிச் சக்கரத்தினுள் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு அந்த சுழற்சியில் விடுதலை அளித்து முக்தி அருளவே அம்மா அவதரித்திருக்கிறார்...
இதுகாறும் நிகழ்ந்த அவதாரங்களில் முற்றிலும் தனித்துவமாய் முழுமையின் பூரணத்துவமாய் அம்மாவின் அவதாரத்தை மக்கள் உணர்ந்து அம்மாவின் திருவடியை நாடி வருகின்றனர்..
மக்கள் அனைவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட இந்த அற்புதமான வாழ்வை கொண்டாட்டமாய் வாழ வேண்டும்...தான் யார் என்றும், தன்னை இயக்கும் சக்தி எது என்றும், எதற்காக பிறவி எடுத்து வந்தோம் என்றும் இங்கு வாழும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்...இதற்குத் தடையாய் இருக்கும் அனைத்து விஷயங்களில் இருந்தும், கர்ம வினைகளில் இருந்தும் அவர்களை மீட்டு தன் இறையுணர்வில் ஆனந்தமாய் நிலைகொள்ளச் செய்யவே அதாவது முக்தி அளிக்கவே, பேரன்பு கொண்டு இந்த அகிலம்தனில் அம்மா அவதாரமாக மலர்ந்திருக்கிறார்...
இறைவனின் ஆனந்தத் தாண்டவமே பிரபஞ்சத்தின் வெளிப்பாடாகும்...அந்த ஆனந்தத்தின் உச்சமே மனிதனின் படைப்பாகும்..
முக்தி அடைவதற்கான இரகசியம் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறது..
இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலில் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்..
அம்மாவிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்...நீயே கதி என்று சரணாகதி அடையுங்கள்... துன்பங்கள் நீங்கி உங்கள் வாழ்வு வளமாவதை கண்கூடாகக் காண்பீர்கள்..
உங்கள் ஆணவத்தைக் கைவிடுங்கள்... அன்னையிடம் மனதார பக்தி செய்யுங்கள்...இறைத் தாயின் அன்பை முழுமையாக உணர்ந்து விடுவீர்கள்..
அனைத்திற்கும் ஆதாரமாம் அன்னையின் திருவடிகளைப் பற்றிக்கொள்ளுங்கள்... அன்னையின் இறை உணர்வோடு இணைந்து செல்லுங்கள்...உங்கள் வாழ்வே கொண்டாட்டமாகி முக்தி நிலை அடைவீர்கள்..
Music
1
/
5
90
title.mp3
Artist name
உங்களுடைய குறைகள் தீர அம்மாவிடம் நேரடியாக அருளாசி பெறுவதற்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள அம்மாவின் சக்தி பீடத்தில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அம்மாவின் தரிசனத்திற்கு வந்து அம்மாவிடம் அருளாசி பெற்றுக் கொள்ளலாம்.(அனுமதி இலவசம்)
அம்மாவை தரிசிக்க நேரடியாக வர இயலாதவர்கள், அன்னையின் திருவுருவப் படம் வைத்து காலை மாலை இரு வேளைகளிலும் அன்னையை மனமார பக்தி செய்து வந்தால்,உங்களின் மனக்குறைகள் யாவும் அன்னையின் பேரருளால் நிவர்த்தி செய்யப்படும்..
ஆன்மீகத்தில் தேடுதல் உள்ளவர்கள், ஆன்மீகத்தில் நிறை நிலை அடைய விருப்பம் உள்ளவர்கள், தன்னை அல்லது இறைவனை உணரும் நாட்டம் கொண்டவர்கள் யாவரும் அம்மாவிடம் தீட்சை பெற்றுக் கொண்டு ஆன்மீகத்தில் பயணிக்கலாம்...நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே அம்மாவிடம் தீட்சை பெற்றுக் கொள்ளலாம்... தீட்சை பெற்ற கணத்தில் இருந்து நீங்கள் நிறைநிலையாம் முக்தி நிலை அடையும் வரையிலும் அம்மா உங்களை வழிநடத்திச் செல்வார்...
ஆன்மீகம் பற்றியும் அம்மாவின் சக்தி தீட்சை பற்றியும் மேலும் தெளிவு பெற, அம்மாவின் சக்தி பீடத்தை தொடர்பு கொள்ளலாம்.
அலைபேசி எண் :+91 90030 95565
.